Home செய்திகள் காஞ்சீபுரம் : மானாமதியில் கிடைத்த வெடிகுண்டுகள் செயலிழப்பு

காஞ்சீபுரம் : மானாமதியில் கிடைத்த வெடிகுண்டுகள் செயலிழப்பு

426
0

கடந்த 23-ஆம் தேதி காஞ்சீபுரம் மாவட்டம் திருப்போரூரை அடுத்த மானாமதி கிராமத்தை சேர்ந்த சூர்யா மற்றும் திலீபன் வெடிபொருள் என்று தெரியாமல் உடைக்க முற்பட்டு வெடித்து சிதறியதில் இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.

இதையடுத்து, அந்தப் பகுதி முழுவதையும் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்த போலீசார், ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரிகள், வெடி குண்டு நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய்களின் உதவியுடன் சோதனையில் ஈடுபட்டு வெடிக்காத மற்றொரு மர்ம வெடிபொருளை கண்டுபிடித்துள்ளனர். கண்டெடுக்கப்பட்ட வெடிகுண்டு ராக்கெட் லாஞ்சரில் பயன்படுத்தப்படும் வெடிபொருள் என்று கண்டறியப்பட்டது.

தற்போது, நிபுணர்கள் கண்டெடுக்கப்பட்ட வெடிகுண்டை ஒரு ஏரியில் மூன்று அடி பள்ளம் தோண்டி சுற்றிலும் மணல் மூட்டைகளை வைத்து பாதிப்பு ஏற்படாத வகையில் பேட்டரி மூலமாக வெடிக்க வைத்து செயலிழக்கச்செய்தனர்.

நேற்று காஞ்சீபுரம் மாவட்டம் அனுமந்தபுரம் ஏரியில் பத்துக்கும் மேற்பட்ட வெடிபொருட்கள் கேட்பாரற்று கிடப்பதாக புகார் எழுந்துள்ளது. அங்குள்ள மலைப் பகுதிகளில் ஆடு மாடுகளை மேய்க்க சென்றவர்கள் ஆங்காங்கே வெடிபொருட்கள் சிதறிக் கிடப்பதைக் கண்டு போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதை தொடர்ந்து, போலீசார் அந்த ஏரியில் இருந்து வெடிகுண்டுகளை கைப்பற்றினர் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisements

Leave a Reply