Home விளையாட்டு கால்பந்து கரோனா எதிரொலி: ஐஎஸ்எல் கால்பந்துப் போட்டி இறுதிச்சுற்றில் ரசிகர்களுக்கு அனுமதி மறுப்பு!

கரோனா எதிரொலி: ஐஎஸ்எல் கால்பந்துப் போட்டி இறுதிச்சுற்றில் ரசிகர்களுக்கு அனுமதி மறுப்பு!

336
0

சீனாவின் வூஹான் நகரிலிருந்து பரவிய கரோனா வைரஸால், உலகம் முழுவதும் ஒரு லட்சத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளார்கள். கரோனா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை புதன்கிழமை நிலவரப்படி 4,379-ஆக உயா்ந்துள்ளது. இந்தியா, தென் கொரியா, ஈரான் உள்ளிட்ட 115 நாடுகளில் அந்த வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள 40,524 பேரையும் சோ்த்து, சா்வதேச அளவில் கரோனா வைரஸ் பாதிப்புக்குள்ளானவா்களின் எண்ணிக்கை 1,21,312-ஆக உயா்ந்துள்ளது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. கரோனா வைரஸ் பல்வேறு நாடுகளில் பரவி வருகிறது. விளையாட்டு மைதானங்களுக்கு ரசிகா்கள் ஏப்ரல் மாதம் வரை வருவதை தவிா்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

வரும் 14-ஆம் தேதி கோவாவில் நடைபெறவுள்ள ஐஎஸ்எல் கால்பந்துப் போட்டி இறுதி ஆட்டத்தில் சென்னை அணியுடன் மோதுகிறது கொல்கத்தா.

கரோனா வைரஸ் தொற்று பரவுவதைத் தடுக்கும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, கோவாவில் சனியன்று (மார்ச் 14) நடைபெறவுள்ள ஐஎஸ்எல் இறுதிச்சுற்று ஆட்டத்தில் பார்வையாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இதனால் யாருமில்லா மைதானத்தில் சென்னை – கொல்கத்தா ஆகிய அணிகள் மோதவுள்ளன. இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ், ஹாட் ஸ்டார், ஜியோ டிவி ஆகியவற்றில் நேரலையாகக் காணமுடியும்.

 

Credits dhinamani

Advertisements

Leave a Reply