Home விளையாட்டு கிரிக்கெட் ஐபிஎல் 2020 போட்டி நடக்குமா நடக்காதா?: சனியன்று முடிவெடுக்கிறது ஐபிஎல் நிர்வாகம்!

ஐபிஎல் 2020 போட்டி நடக்குமா நடக்காதா?: சனியன்று முடிவெடுக்கிறது ஐபிஎல் நிர்வாகம்!

70
0

கரோனா வைரஸ் பல்வேறு நாடுகளில் பரவி வருகிறது. விளையாட்டு மைதானங்களுக்கு ரசிகா்கள் ஏப்ரல் மாதம் வரை வருவதை தவிா்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஐபிஎல் போட்டி இந்தியாவில் ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வரும் 20 ஓவா் உள்ளூா் கிரிக்கெட் போட்டியாகும். சிஎஸ்கே, மும்பை இந்தியன்ஸ் உள்பட 8 அணிகள் இப்போட்டியில் பங்கேற்கவுள்ளன. வெளிநாடுகளைச் சோ்ந்த கிரிக்கெட் வீரா்களும் ஐபிஎல் போட்டியில் பங்கேற்று விளையாடவுள்ளனா். வரும் 29-ம் தேதி முதல் ஐபிஎல் போட்டி தொடங்கவுள்ளது. மும்பையில் நடைபெறவுள்ள முதல் ஆட்டத்தில் சென்னை – மும்பை ஆகிய அணிகள் மோதவுள்ளன.

கரோனா வைரஸ் காரணமாக ஐபிஎல் போட்டி தள்ளிவைக்கப்படுமா என்கிற சந்தேகம் வந்துள்ளது.

கரோனா வைரஸ் பரவாமல் தடுக்கும் பொருட்டு, வரும் மாா்ச் 29-ஆம் தேதி தொடங்கி வரும் மே 24-ஆம் தேதி வரை நடைபெற உள்ள ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளை நடத்த இந்திய கிரிக்கெட் வாரியத்துக்கு அனுமதி வழங்கக்கூடாது என மத்திய அரசுக்கு உத்தரவிடக் கோரி, உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் வரும் சனிக்கிழமையன்று, ஐபிஎல் போட்டியின் ஆட்சிக் குழு கூடவுள்ளது. அந்தக் கூட்டத்தில் ஐபிஎல் போட்டியை நடத்துவது குறித்து விவாதிக்கப்படவுள்ளது.

கரோனா வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்தும் முயற்சியில் ஏப்ரல் 15 வரை அனைத்து சுற்றுலா விசாக்களையும் மத்திய அரசு நிறுத்தி வைத்துள்ளது. இதனால் ஐபிஎல் போட்டியில் வெளிநாட்டு வீரர்கள் கலந்துகொள்வது சந்தேகமாகியுள்ளது. மேலும் ஓர் இடத்தில் பல ஆயிரம் மக்கள் கூடுவதைத் தவிர்க்கவேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஐபிஎல் போட்டியில் வெளிநாடுகளைச் சோ்ந்த பல வீரா்கள் கலந்து கொள்வாா்கள். ஒவ்வொரு ஆட்டத்தையும் மைதானத்தில் சுமாா் 30 ஆயிரம் முதல் 50 ஆயிரம் போ் பாா்வையிட உள்ளனா். போட்டிகளைக் காண வரும் யாருக்காவது கரோனா வைரஸ் தொற்று இருந்தால், அது மற்றவா்களுக்கும் எளிதாகப் பரவ வாய்ப்புள்ளது. இதனால், ஐபிஎல் போட்டியை நடத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இந்தச் சூழலில் ஐபிஎல் போட்டியை எப்படி நடத்த முடியும் என்கிற கேள்வி எழுந்துள்ளது. ஐபிஎல் போட்டி திட்டமிட்டபடி நடத்தப்படுமா? மைதானத்துக்கு வருவதற்கு ரசிகர்களுக்கு அனுமதி கிடைக்குமா? ஐபிஎல் போட்டியில் வெளிநாட்டு வீரர்கள் கலந்துகொள்ள முடியுமா போன்ற கேள்விகளுக்கு விடை காணும் பொருட்டு வரும் சனியன்று ஐபிஎல் கூட்டம் நடைபெறவுள்ளது. இந்தக் கூட்டத்தில் ஐபிஎல் போட்டி நடத்தப்படுவது குறித்த பல முக்கியமான முடிவுகள் எடுக்கப்படவுள்ளன. அன்றைய தினம், ஐபிஎல் போட்டி இந்த வருடம் நடைபெறுமா, அப்படி நடைபெறும் பட்சத்தில் எவ்விதக் கட்டுப்பாடுகளுடன் நடைபெறும் போன்ற கேள்விகளுக்கு விடை கிடைக்கும்.

Credits Dhinamani

Advertisements

Leave a Reply