Home செய்திகள் இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 124 ஆக அதிகரிப்பு

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 124 ஆக அதிகரிப்பு

105
0

உலகம் முழுவதும் 140 நாடுகளை ஆட்டுவித்து வருகிறது கொரோனா வைரஸ். இதுவரை சுமார் 1.60 லட்சம் பேர் கொரானாவினால் உலகம் முழுவதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை சுமார் 6,500. இத்தாலியில் ஒரே நாளில் 368 பேர் நேற்று பலியாகினர். இந்த நாட்டில் இதுவரை பலியானோர் எண்ணிக்கை 1800. ஸ்பெயிலின் 97 பேரும் பிரான்ஸில் 29 பேரும் நேற்று ஒரே நாளில் மரணித்துள்ளனர். இங்கிலாந்தில் 14 பேர் பலியாகி உள்ளனர்.

இந்தியாவிலும் கொரோனா வைரஸின் தாக்கம் அதிகரிக்க தொடங்கியுள்ளது. இக்கொரோனாவின் தாக்குதலில் 2 பேர் பலியாகி உள்ளனர். மேலும் பல்வேறு மாநிலங்களிலும் கிடைத்த தகவல்களின் படி கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 124 ஆக அதிகரித்துள்ளது. மகாராஷ்டிராவில் மேலும் 4 பேருக்கு கொரோனா இருப்பது உறுதியாகி உள்ளது. அம்மாநிலத்தில் இதுவரை மொத்தம் 39 பேர் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். நேற்று மாலை இந்தியா முழு வதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 114ஆகத்தான் இருந்தது. அதன் பின்னர் அதிகரித்திருக்கிறது.

மகாராஷ்டிராவில் மேலும் 4 பேருக்கு கொரோனா இருப்பது உறுதியாகி உள்ளது. அம்மாநிலத்தில் இதுவரை மொத்தம் 39 பேர் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். நேற்று மாலை இந்தியா முழு வதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 114ஆகத்தான் இருந்தது. அதன் பின்னர் அதிகரித்திருக்கிறது.

-Credits one india tamil

Advertisements

Leave a Reply