Home செய்திகள் இந்தியாவின் குடியுரிமை திருத்தச் சட்டத்தால் அணு ஆயுத போர் வரும் – இம்ரான் கான்

இந்தியாவின் குடியுரிமை திருத்தச் சட்டத்தால் அணு ஆயுத போர் வரும் – இம்ரான் கான்

124
0

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் இந்தியாவின் குடியுரிமை திருத்தச் சட்டத்தால் முஸ்லிம்கள் இந்தியாவை விட்டு வெளியேறுவார்கள் என்றும், தெற்காசியாவில் அகதிகள் நெருக்கடிக்கு வழிவகுக்கும் என்றும் இரு நாடுகளுக்கும் இடையே அணு ஆயுத மோதலைத் தூண்டக்கூடும் என்றும் எச்சரித்துள்ளார்.

இந்திய அரசு அண்மையில் புதிய குடியுரிமை சட்டத்தை நிறைவேற்றி உள்ளது. இந்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, நாடு முழுவதும் தொடர் போராட்டங்கள் நடந்து வருகிறது. வடகிழக்கு மாநிலங்களில் தொடங்கிய இந்த போராட்டங்கள் தற்போது நாடு முழுவதும் பரவி உள்ளது.

டெல்லியில் கல்லூரியில் தொடங்கிய போராட்டம் நாடு முழுவதும் பல கல்லூரிகளுக்கு பரவி உள்ளது. குடியுரிமை சட்டத்துக்கு காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தி வருவதால் பதற்றமான சூழ்நிலை பல இடங்களில் காணப்படுகிறது.

இந்நிலையில் இந்திய அரசு நிறைவேற்றியுள்ள குடியுரிமை சட்டத்துக்கு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறுகையில் முன்பு ஜம்மு – காஷ்மீர் மாநிலத்தில் ஏற்பட்ட நெருக்கடியைத் தொடர்ந்து இப்போது குடியுரிமை சட்டம் மேலும் பல நெருக்கடிகளை உருவாக்கும்.
இதன் காரணமாக இந்திய முஸ்லிம்கள் நாட்டை விட்டு வெளியேறி பாகிஸ்தானுக்கு வர நேரிடலாம். பாகிஸ்தானால் அதைச் சமாளிக்க இயலாது.

இது வெறும் அகதிகள் பிரச்னையாக மட்டுமல்லாமல் இரண்டு அணுஆயுத நாடுகளையும் போர் முனைக்கு கொண்டு செல்லும்.

Advertisements

Leave a Reply