Home செய்திகள் இடிக்கப்பட்ட அம்பேத்கர் சிலைக்கு பதிலாக புதிய சிலையை அமைத்த அரசு

இடிக்கப்பட்ட அம்பேத்கர் சிலைக்கு பதிலாக புதிய சிலையை அமைத்த அரசு

172
0

நாகை மாவட்டம், வேதாரண்யத்தில் இளைஞர் மீது கார் மோதியது தொடர்பாக இருபிரிவினருக்கிடையே ஏற்பட்ட மோதலால் வன்முறை ஏற்பட்டு, அம்பேத்கர் சிலை உடைக்கப்பட்டது. மேலும், கார் ஒன்றும் தீவைத்து எரிக்கப்பட்டது.

இதையடுத்து அந்த பகுதியில் பதற்றம் நிலவியது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இருதரப்பை சேர்ந்த 50 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர். அந்த பகுதியில் 300-க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இதனிடையே அம்பேத்கர் சிலை உடைப்புக்கு தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்தனர்.

இந்நிலையில், இருபிரிவினருக்கிடையே ஏற்பட்ட மோதலால் வன்முறை ஏற்பட்டு, உடைக்கப்பட்ட அம்பேத்கர் சிலைக்கு பதிலாக, அரசு சார்பில் இன்று புதிய அம்பேத்கர் சிலை நிறுவப்பட்டது.

Advertisements

Leave a Reply